தந்தையை மூட்டை கட்டிய மகள் - காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்
பெங்களுரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய தந்தையை கொரியர் செய்ய முயன்றுள்ளார். இதற்கான காரணத்தை கேட்ட போலீஷார் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தந்தையை கொரியர் அனுப்பிய மகள்
தற்போது மக்கள் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு சம்பவம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பெண் ஒருவர் தன்னுடைய தந்தையை கொரியர் அனுப்ப முயன்றுள்ளார். இதை விரிவாக பார்க்கலாம்.
பெங்களுரில் வசித்து வரும் பெண் ஒருவர் கையில் பெரிய வெள்ளை நிற பையுடன் பார்சல அனுப்பும் இடத்திற்கு சென்று அதை பார்சல் அனுப்ப வேண்டும் என கூறி உள்ளார்.
ஆனால் பை கொஞ்சம் பெரியது என்பதால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் மற்றும் அவரது குடும்பம் எதுவும் பதில் கூறவில்லை.

பார்சல் அசைவதை பார்த்து ஊழியர்கள் அந்த பார்சலை திறந்து பார்த்துள்ளனர். உள்ளே ஒரு வயதானவர் இருந்துள்ளார். இதன் போலிஇற்கு அறிவிக்கபட்டு போலீஸ் விசாரித்ததன் பின்னர் அந்த முதியவர் அந்த பெண்ணுடைய தந்தை என அறிந்துள்ளனர்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அந்த பெண் உகாதி மற்றும் ரமலான் பண்டிகைகளின் போது பேருந்து டிக்கெட்டுகள் கிடைக்காத பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டவும், இதனால், மக்கள் கொரியர் பயன்படுத்தப்படும் ஒரு நிலைமை உருவாகியுள்ளதை தெரிவிக்க ரீல்ஸ் எடுப்பதற்காக கூறினார்.
இதன் பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ள சம்பவம் தற்போது காணொளி 5லம் இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
@gharkekalesh pic.twitter.com/6knGnsZpQl
— Arhant Shelby (@Arhantt_pvt) March 17, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |