மனித முடியை சாப்பிடும் விநோத பெண்! வயிற்றில் இருந்து எடுத்த முடியின் அளவு இவ்வளவா?
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 2 கிலோ மனித தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
விநோத பெண்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு, அரிய வகை வினோத பழக்கம் இருந்துள்ளது, அது என்னவென்றால் தலைமுடியை சாப்பிடுவது தான்.
இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்திருக்கிறார்.
உணவு கூட சாப்பிட முடியவில்லை. இதனை வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிந்து பல தனியார் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் இவருக்கு வயிற்று வலி அதிகமாக அப்பெண்ணின் குடும்பத்தினர், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றுக்குள் மனித முடி இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ எடையுள்ள தலைமுடி அகற்றப்பட்டது.
குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 16 ஆண்டுகளாக தலைமுடியை அவர் ரகசியமாக சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |