viral video:சேற்று நிலத்தில் நடக்க முடியாமல் தடுமாறும் கடல் சிங்கம்... களிப்பூட்டும் காட்சி
சேற்று நிலத்தில் நடக்க முடியாமல் தடுமாறும் கடல் சிங்கமொன்றின் களிப்பூட்டும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே கடல் சிங்கங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தன்மையை கொண்டிருக்கின்றன. இவை சுமார் ஐந்து அடி முதல் 11 அடி நீளம் வரை இருக்கும்.
இவற்றின் உடல் எடை 200 முதல் 1000 பவுண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் எடை, பெண் சிங்கங்களின் எடையை விட சற்று அதிகமாக இருக்கும்.
கடல் சிங்கங்கள் ஒரு மணி நேரத்திற்கு 25 மைல் நீந்துந்தும் அளவுக்கு நீச்சலில் சிறந்த ஆற்றலை கொண்டிருக்கின்றது.
இருப்பினும் இவை பெரும்பாலும் கடற்கரைகள் அல்லது பாறைகளில் வசிப்பதையெ அதிகம் விரும்புகின்றன.
அப்படி சேற்று நிலத்தில் நடக்க முயற்சித்து தனது வலுவலுப்பான உடலால் தடுமாறும் கடல் சிங்கத்தின் சிரிக்க வைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |