viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி
சிறுத்தைகள் இருப்பதை அவதானித்த கடல் சிங்கமொன்று நுட்பமான முறையில் அதனிடம் சிக்காது தப்பித்த காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடல் சிங்கங்கள் பின்னிப்பெட் எனும் கடல் பாலூட்டிகள் இனத்தை சேர்ந்தவையாகும். கடல் சிங்கங்களுக்கு முன்புறமும் பின்புறமும் ஃபிளிப்பர்கள் காணப்பமுகின்றது.
அவற்றின் உதவியால் தான் தண்ணீரில் நீந்துகின்றன. முன்புற ஃபிளிப்பர்களைக் கொண்டு அவை ஒரு மணி நேரத்திற்கு 25 மைல்கள் வரையில் நீந்திச்செல்கின்றது.
பின்புற ஃபிளிப்பர்கள் முன்னோக்கிச் சூழலும் அமைப்பில் காணப்படுவதால், அவற்றால் நிலத்திலும் நடமாட முடிகின்றது.
இவற்றின் நீச்சல் திறன் இவற்றை வேட்டை அச்சுறுதல்களில் இருந்து பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அப்படி சிறுதைகளிடமிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |