சிறுத்தை ஒரு மானை காப்பாற்றும் அரிய தருணம்! கழுதைப்புலியின் வருகையால் நிகழ்ந்த சோகம்
ஒரு இளம் கலைமானுக்கு மிக அருகில் ஒரு சிறுத்தை இருந்தும் அதனை வேட்டையாடமல் விட்டுவிடுகின்ற, காட்டில் காணப்படும் அரிதான, அமைதியான கருணைக்காட்சிக்கு மத்தியில் ஒரு கழுதைப்புலியின் (Hyenas) வருகை சிறுத்தையின் எண்ணத்தை சட்டென மாற்றிய காட்சியடங்கிய காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
தோற்றத்தில் நாயைப் போலவும் நரியைப் போலவும் காணப்படும் வினோதமான ஒரு விலங்கு தான் ‘கழுதைப்புலி’ என அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இந்த விலங்கு Hyena என குறிப்பிடப்படுகின்றது. கழுதை மற்றும் புலிக்கும் கழுதைப்புலிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
இவை கூட்டமாக இருந்தால் ஒரு சிங்கத்தையே கொல்லும் அளவிற்கு துணிச்சல் மிக்க விலங்காகளாக அறியப்படுகின்றது.

பொதுவாக காட்டிலில் வாழும் வேட்டை விலங்குகளாக சிங்கம், புலி, சிறுத்தை கூட கழுதைப்புலி கூட்டத்தை பார்த்து அஞ்சும் என்பதை சில திரைப்படங்களில் கூட எடுத்துக்காட்டியிருப்பார்கள்.
அதனை பறைசாற்றும் வகையில், சிறுத்தையொன்று, கழுதைப்புலியின் வருகையை அறிந்ததும் பதற்றத்தில் விட்டுவிட நினைத்த மனை தூக்கிக்கொண்டு மரத்தில் ஏறிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |