அந்த விஷயத்தில் மட்டும் என் மனைவி சொல்லை தட்டமாட்டேன்- ரகசியம் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்
என் மனைவி சொல்லை அந்த விஷயத்தில் மட்டும் தட்டவே மாட்டேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்து பேசியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
இந்திய சினிமா உலகில் இசைப்புயல் என்று நட்சத்திரமாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவருக்கு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்திய இசையமைப்பாளர்களிலேயே இவர்தான் அதிகமான சம்பளம் வாங்குகிறார். ஒரு பாடலுக்கு கிட்டத்தட்ட ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இவர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு பணம் கோடிக்கணக்கில் கொட்டும்.
இவ்வளவு வருமானம் வாங்கியும் அவர் இப்படி எளிமையாக இருப்பதற்கு யார் காரணம்ன்னு தெரியுமா? அவர் பின்னால் யார் இருக்கிறார்ன்னு தெரியுமா? வேறு யாரும் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிராபானுதான்.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாயிராபானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும், அமீன் என்ற 1 மகனும் உள்ளனர்.
சாயிராபானு ஒப்பனையாளராக இருந்து வருகிறார். இதனால், ரஹ்மான் அணியும் ஒவ்வொரு ஆடையும் சாயிராபானுதான் ஒப்பனை செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பல மேடை நிகழ்ச்சிகளில் அணிந்து வரும் உடையை சாயிராபானின் கை வண்ணம்தான்.
மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்
இந்நிலையில், இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில்,
என் மனைவி எதை அணியச் சொல்கிறாரோ அதையே அணிந்து கொள்வேன். என் ஒப்பனையாளர் செய்யும் வேலையை என் மனைவியே எடுத்துக் கொண்டு அதில் தீவிரமாக செயல்படுவார். நான் கடந்த 15 வருடங்களாக என் மனைவி வாங்கி தரும் ஆடைகளைத்தான் நான் அணிகிறேன்.
அனைத்து புகழும் என் மனைவிக்கே. என் மனைவி பரிந்துரை செய்யும் எந்த ஆடையாக இருந்தாலும் எனக்கு பொருந்தவில்லை என்று நான் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. அவர் தரும் ஆடையை நான் அணிய மாட்டேன் என்று சொன்னதே கிடையாது.
என் மனைவிக்கு எப்போதும் கருப்பு நிற ஆடையையே விரும்புவார். நான் அந்த நிறத்தை மட்டும் அவ்வப்போது மாற்ற சொல்வேன். அவரும் அதை ஏற்றுக்கொள்வார் என்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |