viral video: ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கி முத்தமிட்ட நபர்... பதறவைக்கும் காட்சி
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை கொஞ்சமும் அச்சமின்றி முத்தமிடும் பகீர் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜ நாகம் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும். பெரும்பாலும் மக்கள் நாகப்பாம்பையும் ராஜ நாகத்தையும் ஒன்றாகவே கருதுகின்றனர். ஆனால் நாகங்களை விடவும் கொடிய விஷத்தன்மை கொண்டது தான் ராஜ நாகம்.
நாக பாம்பின் சராசரி நீளம் 6-7 அடி. ராஜ நாகம் சராசரியாக 6 மீட்டர் அதாவது சுமார் 20 அடிவரையில் நீளம் கொண்டதாக இருக்கும்.
ராஜ நாகங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் கூட வேட்டையாடி உண்ணும். ராஜ நாகம் தீண்டினால் சுமார் 20 நிமிடத்துக்குள் உயிரிழக்க நேரிடும்.
மேலும் அவை ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 15 தொடக்கம் 20 பேரை கொல்ல முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அந்தளவுக்கு கொடிய விஷம் கொண்ட பாம்பை எந்த விதமான பாதுகாப்பும் நபரொருவர் அசால்ட்டாக தூக்கி முத்தமிடும் காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |