மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்து சென்ற கணவன்...பகீர் காணொளி!
ராஜஸ்தானில் பெண் ஒருவரை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம் என்ற 32 வயதாகும் நபரே மது போதையில் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.
குறித்த நபர் மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்துவது மட்டுமன்றி அயலவர்களுடன் பேச விடாமல் வைத்து சித்திரவதை செய்துள்ளார்.
இந்நிலையில்,மதுபோதையில் தனது மனைவியை தாக்கி, தனது பைக்கில் மனைவின் கைகளை கட்டி கல், மணல் நிறைந்த பாதையில் வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். குறித்த பதைப்பதைக்கும் சம்பவம் அடங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Shocking incident in Nagaur: A man, under the influence of alcohol,tied his wife to the back of a bike and dragged her on the road.The video went viral, leading to the man's arrest. Prior to this, the wife was reportedly held captive at home. She is now with her mother in Punjab. pic.twitter.com/Nfik4CJpqj
— Smriti Sharma (@SmritiSharma_) August 13, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |