சிறிய நகரத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு விமானம் எங்கணு தெரியுமா?
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் என்ற சிறிய கிராமத்தில் வேலைக்கு செல்லவும் தங்கள் அலுவலகத்திற்குச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.
அமெரிக்கா
கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் எனும் கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விமான ஓட்னுர்களாக இருக்கின்றார்கள்.
விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை.
இதனால் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்கில் வசிப்பவர்கள் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.
இது கடந்த 1963 ல் கட்டப்பட்டது. இங்கு 124 வீடுகள் இருக்கின்றன. இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
இந்த நிலையில் தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
அதன் விளைவாகத்தான் காமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |