பேயை திருமணம் செய்து கொண்ட பெண் பாடகி- விவகாரத்து கேட்டு மனு
பேயை திருமணம் செய்து கொண்ட பெண் பாடகி விவகாரத்து கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேயை திருமணம் செய்து கொண்ட பெண் பாடகி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பாடகி ராக்கர் புரோகார்ட்(38). இவர் நீண்ட காலமாக இறந்த விக்டோரியன் காலத்து சிப்பாயான எட்வர்டோ என்ற பேயுடன் டேட்டிங் செய்தாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆண்டு நான் ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது எட்வர்டோ என்ற ஆண் பேயை திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் ஒரு ஒரு பாழடைந்த ஆலயத்தில் நடந்தது. நாங்கள் பாரி தீவில் தேனிலவை கொண்டாடினோம். ஆனால், தற்போது பேயான என் கணவரை விவாகரத்து கோரியுள்ளேன்.
திருமணத்திற்கு பிறகு என் ஆவி கணவர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார். பிரிந்து சென்ற பிறகும் கூட என்னையே பின் தொடர்ந்து வந்து, தொல்லை கொடுக்கிறார். ஆவி கணவர் 'அழும் குழந்தையின் அலறலை' பயன்படுத்தி எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.
ஆவி கணவருடனான உரையாடலுக்கு ஆதாரம் உள்ளது. நான் சங்கடத்தில் சிக்கி இருப்பதால் தற்போது பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாடியுள்ளேன். நான் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு பேயை திருமணம் செய்துகொள்வது வேலை செய்யாது. திருமணத்திற்கு முன்பு இருந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இப்போது தன்னை பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.
எங்களுக்குள் தகவல் தொடர்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் உண்மையில் பேச முடியாது. ஒளிரும் மெழுகுவர்த்தி விளக்குகள் வழியாகவே பேச முடியும். என் கணவரை சந்திக்கும் முன் பேய்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது.
கணவர் மீது கொண்ட காதலால் திருமணத்தை தக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரின் நடவடிக்கைகள் தன்னை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதால், தற்போது இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளேன் என்றார்.