30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த நாய் - வைரலாகும் வீடியோ
30 அடி பள்ளத்தில் விழுந்த நாய்யை இயந்திரம் கொண்டு மீட்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
30 அடி பள்ளத்தில் விழுந்த நாய்
இணையதளங்களில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விடும். அதேபோல தான் 30 அடி ஆழகத்தில் ஒரு நாய் தவறி கீழே விழுந்தது.
பள்ளத்திலிருந்து அந்த நாயால் வெளியே வர முடியாமல் குறைத்துக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தது. நாயின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த மக்கள் நாயை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த நாயை பத்திரமாக மீட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நாய் தானே என்று பாராமல் முயற்சி செய்து அந்த நாயை காப்பாற்றிய டிரைவருக்கும், மக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.