பறவைக்கு கூடு கட்டுவதற்காக தனது முடியை அர்பணிக்கும் மான்! வியப்பூட்டும் காட்சி
தனது உரோமங்களை குருவிகள் கூடுகட்டுவதற்காக பிடிங்கிசெல்ல அனுமதித்து அமைதியாக அமர்திருக்கும் மான் தொடர்பான வியப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு தங்களிடம் எவ்வளவு தான் சொத்து மற்றும் பணம் இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும் மனம் என்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.
மனிதர்கள் எல்லா விடயங்களிலும் தனக்கு என்ன லாபம்? இதை செய்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்று மட்டுமே சிந்திக்கும் சுயநலகுணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இயற்கையில் மற்ற எல்லா விடயங்களும் கொடுக்கும் தன்மையுடன் தான் இருக்கின்றது. உதாரணத்துக்கு மரங்கள் தனது மொத்த பயனையும் மற்றவர்களுக்கு கொடுக்கின்றது.
அது போல் நீர், நிலம், காற்று, ஆகாயம் , நெருப்பு என ஐம்பூதங்களும் கொடுக்கும் தன்மையை இயற்கையாகவே கொண்டிருக்கின்றது. இதனால் தான் அவற்றின் ஆற்றல் எப்போதும் முடிவடைவதே இல்லை.
இயற்கையின் கொடுக்கும் தன்மையை பறைசாற்றும் வகையில் தன்னிடம் இருக்கும் உரோமங்களை குருவிகள் கூடுகட்டுவதற்காக அர்பணிக்கும் மான் தொடர்பான காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் விருப்பங்களை குவித்து வருகின்னறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |