9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை... சாக்ஸபோன் வாசித்தபடி ஒத்துழைத்த நோயாளி!
தொடர்ந்து 9 மணி நேர அறுவை சிகிச்சையின் போது சாக்ஸபோன் (saxophone) வாசித்தப்படி ஒத்துழைத்த நபரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறுவை சிகிச்சை
இத்தாலியில் GZ என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு, ரோமில் உள்ள பைடியா என்ற சர்வதேச மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மிகவும் சிறப்பு வாய்ந்த 10 வைத்தியர்களை கலந்துக் கொண்டுள்ளனர்.
சாக்ஸபோன்
அதிநவீன தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் போது குறித்த நபர் விழித்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் வைத்தியர்கள் இவருக்கு விருப்பான சாக்ஸபோன் இசைக்கருவியைக் கொடுத்து வாசிக்க வைத்தபடி சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், “நோயாளியின் மூளையில் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டிகளையும், ரத்த நாளங்களின் அசாதாரண வளர்ச்சியையும் சரிசெய்வதற்கு அவர் கட்டாயம் இருந்தது இதனால்`விழித்திருக்கும் போது மூளையில் அறுவை சிகிச்சை’ (Awake Surgery) மேற்கொள்ளப்பட்டது” என கூறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது அனைவரையும் பிரம்மிக்கும் வகையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வீடியோ சமூக வலையத்தளங்களில் வைராகி வருகிறது.