80 களில் கனவு கன்னியாக இருந்த ரேவதியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
80களில் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரேவதியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரேவதி
தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ராசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி.
1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதித்த இவர், முதல் படத்திலேயே மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
நடித்த முதல் திரைப்படமே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனஅனைத்து மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
மௌன ராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதனை தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ரேவதியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |