சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை: 80 வயதில் கெத்து காட்டிய பாட்டி! வைரலாகும் வீடியோ
சாதிப்பதற்கும் வயது முக்கியமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
80 வயதில் 4.2 கிலோ மீட்டர் துரத்தை 51 நிமிடத்தில் மரதான் ஓடிய மூதாட்டியின் புகைப்படம் தற்போது படும் வைரலாகி வருகின்றது.
மரதான் ஓடிய பாட்டி
மும்பையில் கடந்த ஞாயிறுக்கிழமை மரதான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் 80 வயது பாட்டி ஒருவரும் கலந்துக் கொண்டிருந்தார். இந்தப்போட்டியில் குறித்த 80 வயது மூதாட்டி 51 நிமிடத்தில் 4.2 கிலோ மீட்டர் துரத்தைக் கடந்து ஓடியுள்ளார்.
இவர் இந்தப்போட்டியில் புடவைக்கட்டிக் கொண்டும் கால்கள் சப்பாத்துகளை மாட்டிக்கொண்டும்தான் மரதான் ஓடியுள்ளார்.
இவ்வாறு மரதான் ஓடிய பாட்டியின் வீடியோவை அவரது பேத்தி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப்பாட்டியின் அசாத்திய திறமையைக் கண்டு பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் இந்தப் பாட்டிக்கு இது முதல் தடவையல்ல எனவும் இதற்கு முன்பு 5 முறை மரதானில் பங்கேற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக இவர் தினமும் மரதான் ஓட்டப்பயிற்சி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.