10 மாதங்களில் 23 பதக்கங்கள்! 8 வயது சிறுவனின் சாதனை
கோவையை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 10 மாதங்களில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
8 வயது சிறுவனின் சாதனை
கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-கிருத்திகா தம்பதியினர். இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு. எட்டு வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.
குறித்த சிறுவன் கடந்த 10 மாதங்களாக யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வரும் நிலையில், இதனை மிக விரைவில் கற்றுக்கொள்ளவும் செய்துள்ளார்.
யோகாவில் மிக கடினமான விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம், சப்த திம்பாசனம், சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களை கற்று கொண்ட சிறுவன், ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இதுவரை 23 பதக்கங்களை வென்றுள்ள சிறுவன், பெரும்பாலான போட்டிகளில் முதல் பரிசையே பெற்றுள்ளார். இவரது திறமையினை பல்வேறு மாவட்ட நடிகர் சங்கத்தினர் விருது வழங்கி கவுரப்படுத்தி வருகின்றனர்.
பத்து மாதங்களில் 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று குவித்த 8 வயது சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.