நிறை மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்! உருகிய சீமான்
மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானது, மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 7 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியாவும் (31) அடங்குவார்.
கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றி, தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர் தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்ச்சிலிர்க்கிறேன்.
தன்னலம் என்பது துளியுமில்லாது மகத்தான மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய்த்தொற்றால் களப்பலியான தங்கை சண்முகப்பிரியாவின் மறைவு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல இயலாது கலங்கித் தவிக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.
நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றி, தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர் தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்ச்சிலிர்க்கிறேன். pic.twitter.com/EKJh3PyTH5
— சீமான் (@SeemanOfficial) May 9, 2021