விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்- மருமகள் குறித்து பேசிய நெப்போலியன்
திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மருமகள் பற்றி பேசிய நடிகர் நெப்போலியன் ஒரு சில விடயங்களை ஓபனாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
நெப்போலியன் மகன் திருமணம்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் கோலாகலமாக ஜப்பானில் நடந்து முடிந்துள்ளது.
பல இடங்களில் பெண் தேடியும் கடைசியாக, திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணையே கரம்பிடித்துள்ளார்.
தற்போது பது மண தம்பதிகளாக இருக்கும் தனுஷ்- அக்ஷயாவிற்கு தென்னிந்திய ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதற்கிடையில் தனுஷ்- அக்ஷயாவின் சங்கீத், திருமண கொண்டாட்டங்கள் உட்பட ஒவ்வொரு நிகழ்வின் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், நேற்று திருமணத்தில் நடிகர் நெப்போலியன் மேடையில் கண்கலங்கி அழுதுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மருமகள் பற்றி பேசிய மாமனார்
மகன்கள் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் நெப்போலியன் கோடிக்கணக்கில் செலவு செய்து இந்த திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்துள்ளார். இதற்கு கூட எதிர்மறையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இதற்கெல்லாம் முடிவுக்கட்டும் வகையில் நடிகர் நெப்போலியன் தன்னுடைய மருமகள் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “ பிறந்ததிலிருந்து என்னுடைய மகன் தனுஷை என் மனைவி தான் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். நாங்கள் மூன்று பேரும் தனுசுக்கு எல்லா விதத்திலும் துணையாக நிற்கிறோம். மாறாக தற்போது எங்களுக்கு பக்க பலமாக மருமகள் வந்து விட்டார்...” என மகிழ்ச்சியுடன் மருமகளை வரவேற்றுள்ளார்.
இப்படியொரு சூழலில், “தற்போது திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடி எப்போதும் சந்தோஷத்துடன் வாழ வேண்டும்..” என பலர் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |