7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்..

By Dhushi Jun 09, 2025 07:30 PM GMT
Report

இந்த உலகம் உருவாகி, இன்று வரை அழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் இயற்கை தான். நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையிடம் சிறப்பான சக்திகள் உள்ளன.

அதில் ஒன்றாக மின்னல் பார்க்கப்படுகிறது. மற்ற சக்திகள் போல் அல்லாமல் அவ்வளவு எளிதாக அதனை யாராலும் கணிக்க முடியாது. மின்னல் தாக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் ஒரு புல் கூட இருக்காது. ஆனால் ஒரு மனிதர் பல தடவைகள் மின்னல் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை என வரலாறு இருக்கிறது.

உடனடி மரணத்தை அல்லது உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு ஆபத்தான நிகழ்வாகும். 80 வருட வாழ்நாளில் மின்னல் தாக்கும் வாய்ப்புகள் 10,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும். இருந்த போதிலும் அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு, மின்னல் என்பது நெருங்கிய நண்பர் போன்றது என கூறப்படுகிறது.

அவரின் வாழ்க்கையில் ஒரு வழக்கமான நிகழ்வாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க பார்க் ரேஞ்சரான ராய் சி. சல்லிவன், 35 ஆண்டுகளில் ஏழு முறை மின்னலால் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். மிகவும் வினோதமான மனிதராக பார்க்கப்படும் இவர், உலக சாதனையாளராகவும் பார்க்கப்படுகிறார்.

7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்.. | 7 Times Lightning Struck Man Name

அந்த வகையில், பல முறை மின்னல் தாக்கியும் உயிரிழக்காத மனிதரை பற்றி மேலும் கீழுள்ள பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பார்க் ரேஞ்சர்

ஸ்பார்க் ரேஞ்சரின் கதையில் யாராலும் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் உள்ளன. மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகியதால் சக ரேஞ்சர்கள் அவரை "ஸ்பார்க் ரேஞ்சர்" என அழைக்கிறார்கள்.

மின்னலுடனான சந்திப்புகளை கண்டு வியந்து போனவர்களே அதிகம். இதனால் இவருக்கு கின்னஸ் உலக சாதனைகளில் இடம் கொடுத்துள்ளனர்.

7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்.. | 7 Times Lightning Struck Man Name

முதலாம் தாக்குதல்.

  • கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் படி, ராய் சல்லிவனின் மின்னலுடனான தொடர்பு ஏப்ரல் 1942 இல் ஆரம்பமாகியுள்ளது. வர்ஜீனியாவில் உள்ள ஷெனாண்டோ தேசிய பூங்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது எரியும் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து தப்பிக்கும் போது மின்னல் தாக்கியதில் அவரது வலது காலில் காயம் வந்துள்ளது.
  • இதுவே இவரின் முதல் தாக்குதல் என்றும் பதிவாகியுள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தீக்காயங்கள் பெருவிரல் நகத்தை மட்டுமே இழக்க நேரிட்டது. சல்லிவனின் மின்னல் வரலாற்றில் இது ஆரம்பமாகும்.

7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்.. | 7 Times Lightning Struck Man Name

அடுத்தடுத்த தாக்குதல்

  • கடந்த ஜூலை 1969 ஆம் ஆண்டு ஒரு லாரியை ஓட்டிச் செல்லும்போது அவருக்கு இரண்டாவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார். அத்துடன் அவரின் முகத்திலுள்ள புருவங்கள் எரித்து, கையில் உள்ள கடிகாரம் கருகியுள்ளது.
  • இந்த விபத்து நடந்து, ஒரு வருடம் கழித்து ஜூலை 1970 இல், தோட்டத்தில் இருக்கும் பொழுது அவர் மீண்டும் மின்னலால் தாக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறை தாக்கப்பட்டதால் இடது தோள்பட்டையில் பெரிய வடு ஏற்பட்டது.
  • தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1972 இல், ஒரு காவலர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது மீண்டும் மின்னல் தாக்கியுள்ளது. அப்போது அவருடைய தலைமுடியில் தீப்பிடித்துள்ளது.

7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்.. | 7 Times Lightning Struck Man Name

  • இந்த விபத்து நடந்து ஒரு வருட இடைவெளியில் கடந்த ஆகஸ்ட் 1973 இல் காரில் ஏறிய போது மின்னல் தாக்கியுள்ளது. அப்போது அவருடைய கால்கள் எரிந்து, தலைமுடியும் சேர்ந்து எரிந்துள்ளது.     

இறுதி தாக்குதல்.

  • கடந்த ஜூன் 1976-இல் ராய் நடந்து சென்றுக் கொண்டிருந்த பொழுது ஆறாவது முறை மின்னல் தாக்கியுள்ளது. இதனால் அவரின் கணுக்கால் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது தலைமுடி மீண்டும் எரிந்தது.
  • கடைசியாக கடந்த ஜூன் 1977 இல், ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி, அவரது மார்பு மற்றும் வயிறு எரிந்தது. இப்படி ஆபத்த நிலையில் இருந்து மீண்டு வந்த ராய், கடந்த 1983 இல் 71 வயதில் இறுதியாக இயற்கை மரணமடைந்தார்.

7 முறை மின்னல் தாக்கியும் இறந்து போகாத மனிதர் யார்? கடைசியில் நடந்தது இது தான்.. | 7 Times Lightning Struck Man Name

வீட்டிற்கு வெளியில் துணிகளை காயவைக்கும் போது கூட மின்னல் தாக்கியுள்ளது. அப்போதும் காயம் இல்லாமல் தப்பியுள்ளார். இப்படி பல முறை காயமடைந்தாலும் அவரின் உயிர் அவரை விட்டு பிரியவில்லை என்பதே வியப்பை ஏற்படுத்துகிறது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US