60 வயது தாண்டிய முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்! காரணம் இதுமட்டும் தானாம்
65 வயது நபரொருவர், 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த தகவல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வித்தியாசமான திருமணங்கள்
இந்தியாவை சேர்ந்த உத்தரப் பிரதேசம், ஹூசைனாபாத் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட நக்கத் யாதவ்(65) முதல் திருமணம் முடிந்து சுமார் 6 பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறார்.
இவரின் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார், இவரின் 6 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதனால் நக்கத் யாதவ் சில காலம் தனிமையில் இருந்துள்ளார். இவரின் தனிமை இவரை விரைவில் உருக்கி விடும் என்ற பயத்தில் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
திருமணத்திற்கான காரணத்தை ஓபனாக கூறிய முதியவர்
இது குறித்து தனது மகள்களிடம் கேட்ட போது, அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோயிலில் 23 வயது இளம் பெண் நந்தினி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவரின் திருமணம் உறவினர்களின் மத்தியில் டி. ஜே கொண்டாட்டங்களுடன் தான் இடம்பெற்றுள்ளது.
இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் நக்கத் யாதவ், நான் நந்தனியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை. இந்த திருமணத்திற்கு அவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் என்னுடைய 6 மகள்களும் இதற்கு சம்மதம் எனக்கூறினார்கள். எனது மனைவியின் பிரிவு என்னால் தாங்க முடியவில்லை. ஆகையால் தான் நான் திருமணம் செய்துள்ளேன்” என விளக்கமளித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள்“ 60 வயதில் திருமணம் செய்ய வேண்டுமா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.