ஆண் வேடமிட்டு வந்த மருமகள்! மாமியாரை துடிதுடிக்க செய்த கொடூரம்
மருமகள் ஒருவர் ஆண் வேடமிட்டு மாமியரை கொலை செய்துள்ள சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
மாமியாரை கொலை செய்த மருமகள்
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல்(63). இவரது மனைவி சீதாராமலட்சுமி(58). இந்த தமபதிகளுக்கு ராமசாமி என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், மகன் ராமசாமிக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகன், 10 மாதத்தில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
மாமியார் மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் வந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீதா ராமலட்சுமியை ஆண் உடை, தலைக்கவசம் அணிந்து புகுந்த நபர் ஒருவர் கம்பால் தாக்கியதுடன், அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையையும் பறித்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்பு இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துவந்த நிலையில், சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்துள்ளனர். இதில் ஆண் வேடமிட்டு வந்தது மருமகள் மகாலட்சுமி என்பது தெரிவந்துள்ளது.
பின்பு விசாரணையின் போது, மாமியார் மருமகளுக்கு சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ராமசாமியின் தந்தை ராமசாமிக்கு புதிய வீடு ஒன்றினை கட்டிக்கொடுத்துள்ளார். ஆனாலும் இவர்களின் சண்டை முடியாத நிலையில், மாமியார் கொலை செய்ய திட்டமிட்டு இப்படி கொள்ளையடிப்பவன் போல் வேடமிட்டு மருமகள் இவ்வாறு நாடகம் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.