நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட்! வியப்பில் ரெஜினா கசாண்ட்ரா போட்ட பதிவு வைரல்
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாகத் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இப்படத்தின் விளம்பரத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட கட் அவுட் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா பதிவு
நயன்தாராவுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த 60 அடி உயர கட் அவுட்டைப் பார்த்து வியந்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படும் முதல் நடிகை நயன்தாரா தான் என்று என்னிடம் சொன்னார்கள். இதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்; ஆனால், எனக்கு இது மிகவும் வியப்பாக இருக்கிறது” என்ற கருத்தை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படுத்தியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
This day is going down in history. I was told that Nayan is the first ever actress to have a cut out of this magnitude prior to a film release in Tamilnadu.. That’s a 60 feet feat indeed! Call it the will to succeed, call it manifestation, call it whatever you may. It’s admirable and I’m in awe. 🫡🤍 @NayantharaU #MookuthiAmman2
— RegenaCassandrra (@ReginaCassandra) October 24, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |