உடல் ஆரோக்கியத்திற்கு 6 எளிய வழிகள் இதோ
உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்மில் பலர் அதை கவனிக்க தவறி விடுகிறோம். ஒருவரது ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உணவு, உடற்பயிற்சியை மற்றும் சார்ந்திருப்பது அல்ல உங்களது வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமாக வாழ இதை பின்பற்றவும்
தண்ணீர்
நமது உடலானது 80% தண்ணீரால் நிறைந்துள்ளது. உடல் செயல்பாடு, கழிவுகள் வெளியேற, உடல் வெப்பத்தை சீராக்கி பல நோய்களிடமிருந்து உங்களை தடுக்க இந்த தண்ணீரானது உதவுகிறது.
ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். திரவ உணவுகளான சூப், ரசம், ஜூஸ், மோர், இளநீர் வாயிலாகவும் உங்களது உடம்பிற்கு தேவையான தண்ணீரானது கிடைக்கக்கூடும்.
காலை உணவு:
காலை உணவானது Glucose பெற உதவுகிறது. அந்த காலை உணவை தவிர்ப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாகுவது முதல் சர்க்கரை நோய் வரை அனைத்தும் உண்டாகக்கூடும்.
அதனால் காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காமல் உட்கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி ஆரோக்கியாமான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
புகை மற்றும் மது பழக்கம்:
புற்றுநோயை தவிர்க்க மற்றும் உடல் உறுப்புகள் எதுவும் பாதிக்காமல் இருக்க புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
தியானம்:
மனதானது ஏதாவது ஒன்றை நினைத்து அழுத்தத்திலே இருக்கும். அதுமட்டுமின்றி குடும்பம், நண்பர்கள், கணவன்-மனைவி சண்டை போன்று பல வகையான பிரச்சனைகளுக்கு நடுவில் தான் அனைவரும் வாழ்கிறோம். மனதை ஒருநிலையாக வைத்திருக்க மற்றும் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற தியானத்தை செய்யவேண்டும்.
தூக்கம்:
மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றுதான் தூக்கம். நாள் முழுவதும் உழைத்த உடம்பிற்கு கட்டாயம் ஓய்வு தேவை என்பதால் குறைந்தது 7 முதல் 9 மணி நேர தடையற்ற தூக்கமானது அவசியமான ஒன்றாகும். இரவு 10 அல்லது 10.30 மணி அளவில் தூங்கி சூரியன் உதிப்பதற்கு முன் எழுவது அவசியம்.
உடல் உழைப்பு:
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, அல்லது 50 மாடிப்படி ஏறி இறங்குதல்
போன்றவற்றை செய்வதன் மூலம் உங்களது உடலானது இதய நோய்
பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி 2 சதவீத
அளவிற்கு அந்த பாதிப்பை குறைக்கும்.