ஐந்து வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி... மருத்துவத்தின் மூலம் நிரூபிக்கபட்ட உண்மை
1939ஆம் ஆண்டு லினா மடினாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவரது வயிறு வளர்ந்துள்ளதை மருத்துவரிடம் ஆலோசித்த போது இவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
ஐந்து வயது சிறுமி
ஆரம்பத்தில் லினா மடினாவின் வயிறு வளர்ந்ததை பார்த்த பெற்றோர் அவருக்கு வயிற்றில் கட்டி என நினைத்துள்ளனர்.
ஆனால் நாளடைவில் வயிறு வீக்கத்தை அவதானித்த பெற்றோர் அவரை மருத்துமனைக்கு அழைத்து சென்று உண்மை தன்மையை அறிந்தனர்.
இந்த நிலையில் தான் இவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மருத்துவர்கள் லினா மடினா 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இப்படி எப்படி நடக்கலாம் என ஆச்சரியப்பட வைத்தது. ஒரு பெண் 5 வயதில் தாயாகிறாள், இது யாராலும் நம்ப முடியாத விஷயமாக பரவியது, ஆனால் அது உண்மை.மருத்துவ வரலாற்றில் இளைய தாய் ஐந்தரை வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறந்தது. டாக்டர் லோசாடா முதலில் இந்த அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்.
லினாவின் உடல் மிகவும் சிறியதாக இருந்ததால், மிகவும் சிரமம்ப்பட்டு இந்த அறுவை சிகிச்சையை செய்ததாக கூறினார்.
குழந்தையின் எடை சுமார் மூன்று கிலோ. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழந்தைக்கு ஜெரால்டோ என்று பெயரிட்டுள்ளார்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் போது லினாவின் வயது- 5 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 21 நாட்கள். லினாவுக்கு மூன்று வயதிலேயே முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டதாம்.
ஆனால் இவர் எப்படி கர்பமாகி இருப்பார் என சியான தகவல் தெரியவில்லை ஆனால் பலர் இந்த முழு சம்பவத்தையும் பற்றி கூறினாலும், எக்ஸ்ரே, வீடியோக்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் இது உண்மையில் நடந்தது என்பதை நிரூபித்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |