வாழ்க்கையில் ஜெயிக்க இந்த Secret தெரியாமல் இருக்காதீங்க- சாணக்கியர் கூறுவது என்ன?
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் இராஜதந்திரியாக இருந்தவர் தான் சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் எப்போதும் மனித வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக இருக்கும். இந்த கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.
அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்போம். அதற்கான வழியை சாணக்கியர் ஆயத்தப்படுத்தப்படுத்தி கொடுத்துள்ளார்.
சாணக்கிய கொள்கைப்படி, வாழ்க்கையில் வெற்றிப் பெற சில நல்ல குணங்களை வளர்த்து கொண்டாலே போதும் எனக் கூறப்படுகின்றது.
அப்படியாயின் வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும் அந்த ரகசியங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கையில் சாதிக்க சாணக்கியரின் தத்துவங்கள்
1. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர்களுக்கு உதவ அர்ப்பணிப்பு மற்றும் அன்பு அவசியம் தேவை. இந்த குணம் இருந்தால் நமக்கு எப்போதும் கஷ்டம் இருக்காது. மாறாக கடவுளின் அருளும் அந்த மனிதருக்கும் கிடைக்கும்.
2. மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கட்டுபாடுகள் மற்றும் ஒழுக்கம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி பெற நினைப்பவர்கள் தங்கள் செய்யும் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த குணம் இல்லாத பெண்கள் மற்றும் ஆண்கள் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாது.
3. வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருக்க விரும்பினால் செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். செய்யும் பணியில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியை பார்க்க மாட்டார்கள்.
4. ஒரு மனிதனின் சிறந்த நண்பன் அவனின் அறிவு என சாணக்கியர் கூறுகிறார். புத்தக அறிவு எவ்வளவு இருந்தாலும் அனுபவ அறிவு தான் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கிறது. அறிவும் அனுபவமும் இல்லாத ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம் என சாணக்கியர் எச்சரிக்கிறார்.
5. வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு திட்டத்துடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்தை பற்றி திட்டம் இல்லாதவர்கள் வெற்றியை பார்க்கமாட்டார்கள். திட்டமிடல் சரியாக இருக்கும் போது தோல்வி கூட சில சமயங்களில் வெற்றியாக மாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |