பகவத்கீதை சொல்லும் 5 முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள்... இது புரிந்தால் கவலையே வராது!
பகவத் கீதை என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு உபதேசித்தத தர்மாக அறியப்படுகின்றது.
குருஷேத்திர போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அர்ஜூனனுக்கு ஏற்ற மனக்குழப்பம், தடுமாற்றம் ஆகியவற்றை போக்குவதற்காகவும், அவனது கடமையை அர்ஜூனனுக்கு உணர்த்துவதற்காக உபதேசித்ததே பகவத் கீதையாகும்.

ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த காலத்திற்கு ஏற்ற வகையில் இறைவனே உரைத்த விளக்கமாகும். மனிதர்களின் மனதில் ஏற்படும் அனைத்து விதமான கேள்விகள், குழப்பங்களுக்கும் இதில் பதில் உள்ளது என்றால் மிகையாகாது.
பகவத்கீதை மனித குலத்திற்கு வழிகாட்டும் மிகச்சிறந்த வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியது. இது வாழ்க்கையின் கடமைகளைச் சரியாகச் செய்யவும், மன அமைதியைக் கண்டறியவும் உதவும் ஐந்து முக்கிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. அது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய 5 வாழ்க்கை தத்துவங்கள்

- வாழ்வில் நம்மை விட்டு ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால், அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை. காரணம், அவர்கள் தான் நம்மை இழந்திருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கிய அன்பு, நம் மனத்தின் தூய்மையைக் காட்டுகிறது. அது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; நம் உள்ளத்தின் அழகின் வெளிப்பாடாகும்.அந்தத் தூய்மையை இழந்து செல்வதால், உண்மையான இழப்பு அவர்களுக்கே.
- நம்மைப் புரிந்துகொள்ளாமல் நம்மை விட்டு விலகிச் சென்றவர்களிடமோ அல்லது நம்மைப் புரிந்துகொள்ளாமல் நம்மை காயப்படுத்தியவர்களிடமோ, நம்மை நிரூபிக்க ஒருபோதும் முயற்சிக்கவே கூடாது. ஏனெனில் அவர்களின் பார்வையில் நாம் உணர்வுகளற்ற ஒரு கதாபாத்திரமாக மட்டுமே தோன்றக்கூடும்.
- வாழ்க்கையில் ஒருநாள் எல்லோருக்கும் தனியாக நிற்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை ஏற்படலாம். அப்போதுதான் நமக்கு நாமே மிகப் பெரிய பலம் என்பதையும், நம்முள் இருக்கும் வலிமையை உணர்வதையும் கற்றுக்கொள்வோம்.
- எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும், நம்பிக்கையை இழக்கும் தருணங்களிலும், மனதை உடைத்து விடக்கூடாது.காரணம், உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால், உடைந்த மனதை பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் கடினம்.
- இறுதியாக, மனிதர்கள் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உலகில் நமது பிறப்பு பொருட்களைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்காக அல்ல.மாறாக, நமது ஆன்மாவை வலிமைப்படுத்தி, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்வதற்காகத்தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |