சீரியலில் குடும்ப பெண்ணாக இருக்கும் கனிகாவா இது? மாடர்ன் உடையில் கலக்கல் புகைப்படம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனிகா, பின்பு அதிகமான படங்களில் நடித்து பிரபலமானார்.
சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த கனிகா, பின்னணி பாடகி, தொகுப்பாளினி என பல துறையிலும் கலக்கியவர் ஆவார்.

இவருக்கு திருமணமாகி மகன் உள்ள நிலையில், தற்போதும் இளமையாகவே இருந்து வருகின்றார். தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்பு இந்த சீரியலில் இருந்து விலகினார். இதற்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில், தற்போது மாடர்ன் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

குறித்த சீரியலில் புடவை அணிந்து குடும்ப பெண்ணாக இருந்தவர், தற்போது இளம்பெண்ணாக மாறியுள்ளது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |