42 வயதிலும் இவ்வளவு இளமையா? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சதா
Actress Sadha Instagram Post: நடிகை சதா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சதா
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகியவர் தான் நடிகை சதா. பின்பு விக்ரமுடன் ஜோடியாக அந்நியன் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
பின்பு விக்ரம், அஜித், மாதவன் என்று முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து அசத்தியதுடன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 42 வயதாகும் சதா வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது சிகப்பு நிற மாடர்ன் உடையில் கொள்ளை அழகுடன், இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் அணிந்திருக்கும் சிவப்பு நிற மாடர்ன் உடையில், பல வண்ண மலர் வேலைப்பாடுகள் கொண்ட ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து பல லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

இதற்கு அணிகலன்களாக பச்சை நிற மரகதக் கல் நெக்லேஸ், அதற்கு ஏற்ற ஜிமிக்கி, முடியை விரித்துவிட்டுள்ளார். ஆக மொத்தம் 42 வயதான நடிகை 20 வயது நடிகையாக தனது லுக்கை மாற்றியுள்ளார்.
தற்போது சினிமா வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் இவ்வாறான போட்டோஷுட்டை ஆரம்பித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |