40 மணிநேர அலைச்சறுக்கு...புதிய உலக சாதனை படைத்த வீரர்
தினம் தினம் எத்தனையோ விடயங்கள், சாகசங்கள் நம்மைச் சுற்றி நடந்தவண்ணமே உள்ளன. அவற்றைப் பார்க்கும்பொழுது இப்படியும் செய்யமுடியுமா? என்ற ஆச்சரியம் நமக்குள் எழும்.
பொதுவாக கடல் என்றாலே சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு அதன் வேகமான அலையைக் கண்டால் பயம் ஏற்படும். அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அலைச்சறுக்கு வீரர் ஒருவர்.
முன்னாள் அலைச்சறுக்கு வீரரான பிளேக் ஜான்ஸ்டன் 40 மணிநேரத்துக்கும் மேல் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
குறித்த சாதனை அவுஸ்திரேலியாவின் சிட்னி கடற்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தென்னாபிரிக்காவின் ஜோஷ் என்ஸ்லினின் 30 மணிநேர சாதனையை ஜான்ஸ்டின் முறியடித்துள்ளார்.
சாதனையை நிறைவு செய்துவிட்டு கரைக்கு திரும்பிய ஜான்ஸ்டனை குடும்பத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.