மற்றவர்களை வெறுப்பேத்தவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் சாதகமாக குணம் மற்றும் பலவீனமாக குணம் ஆகியவற்றில் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை, தெரிந்தோ, தெரியாமலோ அடிக்கடி காயப்படுத்தும் வகையில் பேசும் மற்றும் நடத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி மற்றவர்களை ஏதாவது ஒருமுறையில் காயப்படுத்தும் அல்லது வெறுப்பேற்றும் மோசமாக குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசியினர் இயல்பாகவே மிகவும் வலிமையாக மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் தைரியத்தால் எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டாக கடந்து சென்றுவிடுவார்கள்.
ஆனால் இவர்கள் அவசர குணம் மற்றவர்களின் மனநிலை குறித்து சிந்திக்க இவர்களுக்கு நேரம் கொடுப்பதே கிடையாது. இதனால் இவர்கள் மற்றவர்களை தங்களின் செயலால் பல நேரங்களில் காயப்படுத்திவிடுவார்கள்.
இவர்களிடம் காணப்படும் காரணமற்ற கோபம் மற்றவர்கைளை இவர்கள் மேல் வெறுப்படைய செய்கின்றது. இவர்கள் மற்றவர்களின் மனநிலை பற்றிய அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைகளுக்குப் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் தேவைக்கு ஒருவரை பயன்படுத்திக்கொள்ளும் வரை பணிவாக இருக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.ஆனால் தேவை தீர்ந்த பின்னர் வேறு நபராகவே மாறிவிடுவார்கள்.
இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாகவும், மற்றவர்களின் மனநிலை குறித்து அக்கறை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். பல நேரங்களில் மற்றவர்களை வெறுப்பேற்றுவதே இவர்களின் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி

புத்திகூர்மையின் கிரகமாக புதனால் ஆளப்படும் கன்னி ராசியினர் உலகத்தை பற்றிய அறிவுடையவர்களாகவும் சிறந்த திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
அவர்களிடம் மற்றவர்களை விமர்சனம் செய்யும் குணம் இயல்பாகவே இருக்கும். இவர்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் வகையில், பேசுவதற்கும், அவ்வாறான செயலில் ஈடுப்படுவதற்கும் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
அவர்கள் நல்ல எண்ணத்துடனேயே செயல்பட்டாலும், அவர்களின் தொடர்ச்சியான குறை கண்டுபிடிக்கும் குணம் மற்றவர்களை எளிதில் காயப்படுத்திவிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |