திடீர் கோடீஸ்வரர் ஆகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். ஏனெனில் வலிமையான கிரகங்களால் ஆளப்படுவதால் தடையற்ற வெற்றியை பெறுவார்கள்.
ஆனால் ஒருவரது திறமையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் திறமையையும், ஆளுமையையும் கொண்டு அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு கிரகங்களின் தளபதியாக இருக்கும் செவ்வாய் அதிபதியாக இருக்கின்றார். இதனால் துணிச்சலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையும் கொண்டிருப்பார்கள்.
எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் கொடுக்கின்றது. இவர்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றினைக் கொண்டு அனைத்து விடயத்திலும் சந்திப்பார்கள்.
மேலும் தடைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதன் மூலம், மற்றவர்கள் தவறவிடும் வாய்ப்புகளையும் எளிதில் ஈர்க்கமுடியுமாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு பணம், ஆடம்பரம், அழகு இவற்றிற்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரனால் ஆளப்படுகின்றனர். இவர்கள் விடாமுயற்சி மற்றும் பொறுமை, மன உறுதிக்கு புகழ்பெற்றவர்கள்.
அதிஷ்டத்தை இவர்கள் தேடி செல்லாமல் இருந்தாலும், விடாமுயற்சியினால் எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு கிடைக்குமாம். பலவரட கடின உழைப்பிற்கு பின்பு கிடைக்கும், பெரிய வெற்றியாக இருந்தாலும் இவர்களை தானாக தேடிவருமாம்.
இவர்களை ஆளும் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை தரவும், வெற்றியை ஈர்க்கவும் உதவுகின்றது.

சிம்மம்
சிம்ம ராசியினர் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் நிலையில், இவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்குமாம். மேலும் தங்களது வசீகரத்தினாலும், தன்னம்பிக்கையினாலும் அனைத்தையும் சிறப்பாக செய்வார்கள்.
இவர்களின் மனஉறுதி மற்றும் தாராள மனப்பான்மை எதிர்பாராத செல்வத்தை கொண்டு வருமாம். மேலும் இயல்பாகவே வாய்ப்புகள் இவர்களை தேடி வரும்.
வசீகரமான நடத்தையும் தலைமைத்துவத் திறன்களும் அடிக்கடி அவர்களுக்கு எதிர்பாராத வெற்றிகளை பரிசளிக்கின்றன.

தனுசு
தனுசு ராசியினர் குருபகவானால் ஆளப்படுகின்றனர். ராசிகளில் மிகவும் அதிர்ஷ்டமாக ராசியாக கருதப்படும். நம்பிக்கை மற்றும் சாகச மனப்பான்மை எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.
கல்வி, பயணம் மற்றும் எதிர்பாராத வணிக கூட்டணிகள் மூலம் எதிர்பார்க்காத வெற்றியினை பெறுவார்கள். இயல்பான நம்பிக்கை புதிய விடயத்தினை கண்டறிய உதவுகின்றது. இது பெரும்பாலும் எதிர்பாராத வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |