பொங்கல் முதல் பொங்கும் எதிர்காலம்! இந்த 4 ராசிக்காரருக்கும் இனி நல்ல காலம் தான்... பேரதிர்ஷ்டம் தேடி வரும்!
புத்தாண்டில் சூரியனின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 14 அன்று நடக்க உள்ளது.
சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்போது, ஒருவரது கர்மாக்கள் முடிவடையும் என்று நம்பப்படுகிறது.
சூரியனின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தரும். யார் யாருக்கு என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் மாறியவுடன், அதிர்ஷ்டத்தின் கதவும் திறந்துவிடும். சூரியனின் சஞ்சாரத்தின் போது எந்த வேலை செய்தாலும் அது சாதகமான பலன்களையே கொடுக்கும். தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
சிம்மம்
சூரியனின் இந்த ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும். பயணத்திற்குப் பிறகு பொருளாதார வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். இதைத் தவிர, கடின உழைப்பின் முழுப் பலன்களையும் இந்த சமயத்தில் பெறுவீர்கள்.
விருச்சிகம்
உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தினசரி வருமானம் அதிகரிக்கும். இது தவிர பூமி சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும்.
மகரம்
தனுசில் இருந்து மகர ராசிக்கு மாறும் சூரியன், இந்த ராசிக்காரர்களுக்கு பூரண அருள் புரிவார். உத்யோகத்தில் வெற்றியும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் சூரியனைப் போலவே பிரகாசமாக இருக்கின்றன.