ஒரே ஒரு பிட்காயின் வாங்கிய தந்தை... 4 வயதில் 6500 கோடி சொத்துக்கு அதிபரான குழந்தை! வியந்துபோன முதலீட்டாளர்கள்
அமெரிக்க சந்தையில் பிட்காயின் மதிப்பு பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. அதற்குக் காரணம் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC அமைப்பு பிட்காயின் ETF குறித்து ஒப்புதலை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தான்.
இதனிடையே, கடந்த ஒரே நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 59,055.50 டாலரில் இருந்து 62,652.40 டாலர் வரை உயர்வு கண்டது. இந்த அதிகரிப்பு கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளது.
இந்த நிலையில், மற்றவர்களுக்குக் கிடைத்த லாபத்தை விட, பிட்காயின் மூலம் 4 வயது குழந்தைக்குக் கிடைத்த லாபம் தான் தற்போது கிரிப்டோ முதலீட்டு சந்தையில் பெரிய பேசும் பொருளாக மாறிவருகிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனரான Joao Canhada என்பவருக்கு நான்கு வருடங்கள் முன்பு குழந்தை பிறந்ததுள்ளது. அப்போதே 2017-ல் குழந்தை பிறந்தபோது Joao, 1000 டாலருக்கு ஒரு பிட்காயினை வாங்கி பரிசாகக் கொடுக்கும் வகையில் குழந்தை பெயரில் முதலீடு செய்துள்ளார்.
தற்போது இந்த பிட்காயின் மதிப்பு தான் கடந்த நாட்களுக்கு முன் உயர்வில் 62000 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதனால், Joao Canhada-வின் 4 வயது குழந்தை சுமார் 6,500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், 2017-ல் இந்த குழந்தை பெயரில் முதலீடு செய்யப்பட்ட ஒரு பிட்காயின் விலை இந்திய மதிப்பில் 70000 ரூபாய். இதுவே இன்று இந்திய மதிப்பில் கிட்டதட்ட 46 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு வயது குழந்தை போன்றே, இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனும் கிரிப்டோ சந்தையில் லாபம் அடைந்துள்ளார். 12 வயதாகும் அந்த சிறுவனான பெணிமின் அகமது, தனது பள்ளி காலத்தில் அதிகளவிலான NFT-ஐ விற்பனை செய்துள்ளார்.
இன்றைய முன்னணி கிரிப்டோகரன்சியின் விலை
பிட்காயின் - 61,269.19 டாலர் (0.80 சதவீத உயர்வு), எதிரியம் - 3,777.37 டாலர் (1.90 சதவீத சரிவு), ரிப்பிள் - 1.08 டாலர் (4.01 சதவீத சரிவு), கார்டானோ - 2.14 டாலர் (1.42 சதவீத சரிவு), போல்காடாட் - 41.27 டாலர் (1.47 சதவீத சரிவு), டோஜ்காயின் - 0.25 டாலர் (6.77 சதவீத சரிவு).