இந்த 3 ராசி பெண்கள் காதலியாக கிடைப்பது வரமாம்! ஏன்னு தெரியுமா?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே தங்களின் வாழ்க்கை துணையாக வரப்போகும் நபர் மீது அதிக எதிர்ப்பார்ப்பும், கனவுகளும் வைத்திருப்பது வழக்கம்.
குறிப்பாக வாழ்க்கை துணை தோற்றத்தில் அழகாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும்.

ஆனால் சிலர் தோற்றம் எப்படி இருந்தலும் பராவாயில்லை தனக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், இருப்பதுடன் தன்னை அன்பாக கவனித்துக்கொள்ளும் குணம் கொண்ட துணை கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பேரழகிகளாக இருந்தும், காதலில் இறுதிவரை நேர்மையாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள், இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், யாரையும் ஏமாற்றாத மென்மையான உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்பகளாம்.
நேர்மையான இதயத்துடன் காதலிக்கும் இவர்கள் காதலுக்காக இறுதிவரை போராடுவார்களே தவிர தங்களின் துணையை மாற்றும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்காது.
அவர்களின் இயல்பான அக்கறை உணர்வும், உணர்ச்சிப்பூர்வமான தொடர்பும் இவர்களை காதலில் மிகவும் நேர்மையானவர்களாக மாற்றுகின்றது. இந்த ராசி பெண்கள் காதலியாக கிடைத்தால் வாழ்க்கையே சொர்க்கமாக இருக்கும்.
ரிஷபம்

அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் மற்றவர்கைளை நொடியில் வரம் பேரழகிகளாக இருப்பார்கள். அதே நேரம் மிகவும் நேர்மையான நடத்தையையும் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்திலிருந்து உருவாகும் உறுதியான அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களை அடைய பல ஆண்கள் போட்டிபோட்டுக்கொண்டு வந்தாலும் இவர்களின் காதல் ஒருவர் மீது தான் இருக்கும்.
ரிஷப ராசி பெண்கள் தங்கள் காதலில் மிகுந்த நேர்மையும் உண்மையும் கொண்டவர்களாக அறிப்படுகின்றார்கள். இவர்களை காதலியாக அடைவது பெரும் வரம் தான்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாக இருக்கும் அதே நேரம் தங்களின் அன்புக்குரியவருக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் பேரார்வமும், காதலும் அவர்களின் செயல்படுகளிலும், அவர்களின் துணைக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் நிச்சயம் வெளிப்படுத்தப்படும். இவர்களின் விசுவாசம் யாராலும் ஈடு செய்ய முடியாததாக இருக்கும்.
இவர்கள் காதல் வெற்றிபெற்றாலும், தோல்வியில் முடிந்தாலும் இறுதிவரையில் ஒரே ஆண் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |