நாகமணியை பாதுகாக்கும் நான்கு நாகங்கள் - நேரடி காட்சி வைரல்
தற்போது இணையத்தில் நான்கு நாகங்கள் நாகமாணிகம் போன்ற ஒரு ஒளிரும் கல்லை சுற்றி பாதுகாப்பது போல காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
புராணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் நாம் அதிகம் கேள்விப்பட்ட நாகமணி பற்றிய விவாதம், தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
மிகவும் அரிதான மற்றும் புனிதமான நாகமணியை ஒத்த ஒரு பொருளைச் சுற்றி நான்கு ஆபத்தான நாகங்கள் சூழ்ந்திருக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் இணையவாசிகளை ஈர்த்து வருகின்றன.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த விசித்திரமான காட்சியைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

சிலர் இந்த வீடியோவில் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அந்த நான்கு பாம்புகளும் உண்மையான நாகமணியைக் காக்கின்றனவா? அல்லது இது ஒரு போலியான வீடியோவா? என்று கேள்வியும் எழுப்பி வருகின்றர்.
இதை ஒரு போலி என்று நிராகரிக்கின்றனர். சில தொழில்நுட்ப வல்லுநர்கள், தற்போது கிடைக்கக்கூடிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் அல்லது முப்பரிமாண வரைகலையின் உதவியுடன் இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது சாதாரண பாம்புக் காணொளிகளுக்கு டிஜிட்டல் ஒளியமைப்பைச் சேர்த்து மக்களைத் தவறாக புரிந்துகொள்ள வைக்கின்றன என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அறிவியல் கருத்து
உயிரியல் வல்லுநர்கள் அளித்த தகவல்களின்படி. பாம்புகளின் தலையில் எந்தவிதமான மணிகளோ அல்லது கற்களோ வளர்வதில்லை.
பாம்பின் தலையில் உள்ள தோல் அல்லது எலும்பு அமைப்பு சாதாரண விலங்குகளைப் போலவே இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |