பயணிகளை ஒன்றும் செய்யாமல் திமிங்கலம் கொடுத்த ஷாக்... ஆச்சரிய வீடியோ
படகின் அடியில் நீந்திச் சென்ற நீலத் திமிங்கலத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படகின் அடியில் நீந்திச் சென்ற நீலத் திமிங்கலம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், படகு ஒன்று நடுக்கடலில் சென்றுக் கொண்டிருக்கிறது. அப்போது படகிற்கு எதிரே 35 மீட்டர் நீல திமிங்கலம் நீந்தி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே படகு இருப்பதை பார்த்த அந்த திமிங்கலம் கடலுக்கு அடியில் மூழ்கியது.
அந்த நீலத் திமிங்கலம் படகில் பயணம் செய்த அனைவருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படாதவாறு படகிற்கு அடியில் நீந்திச் சென்ற விதம் படகில் இருந்த பயணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
35 meter blue whale swimming under the boat pic.twitter.com/5B1Tvk059e
— Levandov (@blabla112345) March 10, 2023