உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 09 ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தில் சனி 2027ஆம் ஆண்டின் பிப்ரவரி 08 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார்.
அந்தவகையில், உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நல்ல பலன்களைத் தரும்.
- நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
- பொருளாதார நிலை வலுப்படும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.
- வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்
- இக்காலக்கட்டம் வெற்றியைத் தரும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தினரின் ஆதரவுடன் முக்கிய பணிகளை எளிதாக முடியும்.
- சொந்த தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
- முக்கியமானவர்களுடனான உறவுகள் வலுப்படும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- சமூகத்தில் மதிப்பு மற்றும் அந்தஸ்து உயரும்.

கும்பம்
- இக்கலக்கட்டம் சாதகமாக இருக்கும்.
- அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மேம்படும்.
- பணியாளர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
- காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட கால கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |