இளம் வயது பெண்ணை வைத்துக் கொண்டு குழந்தை பெற்றெடுத்த தாயார்! வீட்ல விசேஷம் படத்தை நினைவூட்டும் சம்பவம்
23 வயதான மலையாள சீரியல் நடிகையின் 47 வயது தாயாருக்கு குழந்தை பிறந்துள்ள செய்தி, சினிமா துறையை திரும்பி பார்க்கவைத்துள்ளது.
நடிகை ஆர்யா
மலையாள சீரியல் நடிகை ஆர்யா தனது பள்ளி படிப்பை வீட்டிலேயே முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர், படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகு நடனம், மாடலிங் போன்றவற்றில் கவனம் செலுத்தி நடிகையாக உருவெடுத்தார்.
சமீபத்தில் இவர் தனது தாயார் கர்ப்பமாகியுள்ளார் என்ற செய்தியை அறிவித்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தாய் கர்ப்பம்
இந்நிலையில் இவர் சில வாரங்களுக்கு முன்பு அவர், தனது தாய் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது தாய் ( 47 வயது) இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பகிர்ந்த பதிவு
தற்போது தனக்கு தங்கை பிறந்திருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஆர்யா பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிதாகப் பிறந்த தங்கையை தூக்கிச் செல்லும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதற்கு அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதனை பார்கும்போது, தமிழில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான “வீட்ல விசேஷம்” படத்தை நினைவூட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.