வயிற்றில் உள்ள கொழுப்பு கடகடவென கரைய வேண்டுமா? இந்த 3 பானம் போதும்
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் அருமையான எலுமிச்சை டீடாக்ஸ் பானத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் தங்களது உடம்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை.
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் இருக்கும் மாற்றத்தினால், உடல் எடை அதிகரித்து பல நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
அதிலும் இன்று பலரின் கவலை என்னவெனில் தொப்பை தான். வயிற்றை சுற்றி தேங்கியிருக்கும் தொப்பையைக் குறைப்பதற்கு பல உடற்பயிற்சிகளையும், பலவிதமான மருந்துகளையும் சாப்பிட்டு வருகின்றனர்.
அவர்களுக்கான அருமையான பதிவு தான் இதுவாகும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தொப்பையை எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம்.
வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பதில் எலுமிச்சை சிறந்த தேர்வாக இருக்கின்றது. ஏனெனில் இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுவதுடன், சிறந்த நச்சுத்தன்மைக்கும் உதவுகின்றது.
சியா விதைகள்
எலுமிச்சை சாறுடன் ஊற வைத்த சியா விதைகளை சேர்த்து பருகுவதால், செரிமான பிரச்சினை, ரத்த சர்க்கரை பிரச்சினையை சரிசெய்கின்றது. பசியை கட்டுப்படுத்த உதவுவதுடன், எடை இழப்புக்கும் உதவுகின்றது. இது தவிர, சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளனன.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. ஆதலால் எலுமிச்சையுடன், மஞ்சளை சேர்த்து பருகுவதால், தொப்பை கொழுப்பு குறைகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகின்றது.
இஞ்சி டீ
எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருப்பது இஞ்சி ஆகும். எலுமிச்சை சாறுடன் இஞ்சி சேர்த்து பருகுவதால், வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைவதுடன், இரைப்பை குடல் அசௌகரியத்தை நீக்கி, குடலின் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |