லட்சுமி தேவி வசிக்கும் அந்த 3 இடங்கள்- இனி பணக்கஷ்டமே வராதாம்.. சாணக்கியர் சொல்லும் Secret
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள் உள்ளன. அதிலிருந்து லட்சுமி தேவி இலகுவில் நகர மாட்டார்.
இப்படியான இடங்களில் செல்வத்தை சேகரித்து வைத்தால் ஒரு போதும் குறைவு ஏற்படாது என சாணக்கியர் கூறுகிறார். அந்த இடங்கள் தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
லட்சுமி தேவி தங்கும் இடங்கள்
1. புத்திசாலிகள் இருக்கும் இடங்களில் தெய்வம் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். நல்லொழுக்கம், அறிவு பூர்வமான சிந்தனைகளிலில் லட்சுமி தேவி வசிப்பார். எந்த சூழ்நிலையிலும் இவர்களை விட்டு விலகவும் மாட்டார். முட்டாள்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காத வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறார்.
இலக்கை நோக்கி பயணிக்கும் புத்திசாலிகள் அவர்களின் வேலைகளில் கவனமாக இருப்பார்கள். சரியான பாதையில் தனது இலக்கை அடையும் நபருடன் லட்சுமி தேவி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். இதனால் தான நல்லவர்களை இறைவன் எப்போதும் கை விட மாட்டார் என கூறுவார்கள்.
2. சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி உணவு பற்றாக்குறை இல்லாத வீட்டில் அல்லது தானியங்கள் நிறைந்திருக்கும் வீட்டில் வசிக்கிறார். அன்னபூரணியாக இருக்கும் லட்சுமி எப்போது குறைவில்லாமல் பார்த்துக் கொள்வார்.
எனவே உங்கள் வீட்டில் தானிய களஞ்சியத்தை முழுமையாக வைத்திருக்க முடியாது. இருந்தாலும் முற்றிலும் தீர்ந்து போகக் கூடாது. அதிலும் குறிப்பாக உணவை அவமதிக்காதீர்கள். இந்த செயல் லட்சுமி தேவியின் கோபத்தை ஏற்படுத்தும். இதனால் பணக்காரன் கூட ஏழையாகலாம்.
3. குடும்ப ஒற்றுமை, அன்பு, செழிப்பு இவற்றிற்கு பெயர் போன தெய்வம் தான் லட்சுமி தேவி. இவர் வீட்டில் இருக்கும் போது எந்த காலத்திலும் பணப்பற்றாக்குறை இருக்காது. மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல அதிர்ஷ்டத்திற்கும் கணவன்- மனைவி இடையே அன்பு இப்படி அனைத்தும் நல்லதாக நடக்கும்.
கணவன்-மனைவிக்குள் அன்பில்லாத வீட்டில் அடிக்கடி பிரிவினை, சண்டை, சச்சரவுகள் இருக்கும். இது போன்ற ஒரு வீட்டில் லட்சுமி தேவி இருப்பதை உறுதிச் செய்ய முடியாது. அத்தகைய வீட்டில் நிறைய அமைதி இருக்காது.
4. ஒரு மனிதன் தன் நடத்தையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். தவறான பழக்கங்கள் உடலுக்கும் உங்களுக்கும் நல்லதாக இருக்காது. பணத்தை முறையாக கையாள்வதில் அறிவு இருக்க வேண்டும். இந்த குணம் இல்லாதவர்கள் வீட்டில் நீண்ட காலம் செல்வம் நிலைக்காது.
மாறாக சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி ஒருபோதும் கோபமான நபரின் அருகில் கூட இருக்க மாட்டார். மற்றவர்களை அவமானப்படுத்தி அதில் சந்தோஷம் கொள்ளக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |