இன்னும் 3 நாட்களில் 18 மாதங்களுக்கு பின்னரான செவ்வாய் பெயர்ச்சி: ஜாக்பட் எந்த ராசிகளுக்கு?
ஜோதிடம் அனைத்தையும் அறிந்தவை என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மங்களகரமான கிரகமாக பார்க்கபடுகின்றார்.
செவ்வாய் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும்போதெல்லாம் அனைத்து ராசிகளும் அதற்குரிய பலனை அனுபவிக்கும். இதனை தொடர்ந்து 18 மாதங்களுக்கு பின் தற்போது இந்த 2025 இல் செவ்வாய் பெயர்ச்சி ஆரம்பமாக உள்ளது.
இது சில ராசிகளுக்கு தொழில் வளர்ச்சியை அடைவதற்கும்பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கப்போகிறது. செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான நன்மைகளை கொடுக்கும். எந்தவொரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்கள் இருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் நிறைவேறும். நீங்கள் புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான அனைத்து நன்மைகளும் கிடைக்கும். செல்வம் வீடு தேடி வரும். |
துலாம் | துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது, லாப வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்களுக்கு வேலையில் பல லாபங்கள் கிடைக்கும். பொருளாதார வேலையில் நல்ல முன்னேற்றம் உங்களை வந்து சேரும். புதிய வேலையை தொடங்க சிறப்பான நேரம். நிதியில் பாரிய முன்னேற்றம் இருக்கும். |
விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அபரிமிதமான நன்மைகளை கொடுக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வணிக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறது. இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த தொழில் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். செவ்வாய் கிரகத்தின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
