24 மணிநேரத்தில் 8008 புல் - அப்கள் எடுத்து சாதனை படைத்த இளைஞன்
உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவு. குறிப்பாக ஆண்களுக்கு அந்த ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். தனது உடல் வலிமையையும் பலத்தையும் அனைவரும் பார்த்து வியப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றே.
உடற்பயிற்சிகளில் பல சாதனைகளை இதுவரையில் நாம் கண்டிருப்போம். ஆனால், இப்படியும் சாதனைகள் செய்ய முடியுமா? என்பதற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை உதாரணமாகக் கூறலாம்.
ஆம், அதாவது தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து எட்டு புல் - அப்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
24 மணித்தியாலத்தில் 8,008 புல் - அப்கள் எடுத்ததன் மூலம் அவர் இதற்கு முன்பு செய்து சாதனையான 7,715 புல் - அப்களை முறியடித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் 6,000அமெரிக்க டொலர் நிதியாக திரட்டப்பட்டுள்ளது. இவரது இந்த முயற்சி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.