மீன ராசி குரு ஆட்சி செய்யும் ராசியாகும். இந்த மீன ராசியில் தான் சனி பெயர்ச்சி நடக்கின்றது. இது பல ராசிகளுக்கு ஏழரை சனி பலனையும் கொடுக்கும். 
இதில் தொடங்கும் புது வருடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் பெறும் நல்ல விடயங்களும் உள்ள. அதிலும் 2026 ஏழரை சனி மூலம் நன்மையும் பெறுகின்றன. 
 திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி, சனி பெயர்ச்சி 2026, மீன ராசியில் தொடரும். அதே போல, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, சனி பெயர்ச்சி 2026, மார்ச் மாதம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறும்.
 சனி பெயர்ச்சி 7.5 சனி நடக்கும் ராசிகளுக்கு என்ன பலன்களைக் கொடுக்கும், ஏழரை சனி காலத்தில் பிரச்சனைகள் உண்டாகுமா என்ற கவலைகள் ஏற்படலாம். அனால“ இல்லை அவர்களுக்கு நற்பலன் தான் உள்ளது. அதை பார்க்கலாம். 

| மேஷம் | - நீங்கள் இவ்வளவு அண்டகளாக செய்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு எது முக்கியமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. 
 - மேஷ ராசிக்கு 2026 சனி பெயர்ச்சியில் விரைய சனி நடந்தாலும், செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் நிறைவாகவே இருக்கும். 
 - நீங்கள் எந்த தொழில் விரும்பினாலும் அதில் வளர்ச்சி பெறுவீர்கள். 
 - இந்த சனி பெயர்ச்சி மூலம் நீங்கள் வெளிநாட்டு, வெளிமாநிலத்தில் வேலை, ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். 
 -  நிறைய பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும்.
 
  | 
| மீனம்  | - ஏழரை சனி காலத்தின் ஜென்ம சனியாக சனி மீனம் ராசிக்கு வருகையில், உங்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 - ஆனால் கஷ்டத்திலும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
 - நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்காக புதிய பொறுப்புக்களை ஏற்க வேண்டும்.
 -  உங்கள் இலக்குகள், பொறுப்பு மற்றும் தேவைகளை நீங்கள் எதை சரியானதாக நினைக்கிறீர்களோ அதை யோசித்து செய்ய வேண்டும்.
 - ஆண்டின் தொடக்கத்தில், சில நெருக்கடிகளை உணரலாம், ஆனால் மாதங்கள் செல்ல செல்ல, அவை உண்மையில் எதைப் பற்றியது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். 
 
  | 
| கும்பம் | - 2026 ஆம் ஆண்டில் சனி கும்ப ராசிக்கு சில வித்தியாசமான பாதிப்புக்களை கொடுக்கும்.
 - இது ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால் சாதகமான மாற்றங்களை உங்களுக்கு தரும்.
 - உங்கள் பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். இது வாழ்க்கையை கடுமையாக மாற்றலாம்.
 -  ஆனால் இது தான் உங்கள் வாழ்க்கைக்கு முன்னேறுவதற்கான முதல் படி.
 - இந்த ஆண்டு, நீங்கள் வேலையிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கொஞ்சம் நன்றாக சிந்துத்து செயற்பட வேண்டும். 
 - வருமானம், வேலை, தொழில் சார்ந்த விஷயங்கள் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். சில மாதங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
 
 
 
  | 
    
        
    
    
 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).