2026இன் குருப்பெயர்ச்சி - முதல் மாதமே கடக ராசிக்கு இது நடக்கும்
2026 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இன் குருப்பெயர்ச்சி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நடக்கும் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டகரமானதாக மாறும். மேலும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க இருக்கிறது.
கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் விலகும். மன சங்கடங்கள் நீங்கும். தைரியமும், தெம்பும் அதிகரிக்கும்.
நினைத்த காரியங்கள் நடக்கும். மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு தரும் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமைய இருக்கிறது.

குரு பெயர்ச்சி
கடக ராசிக்காரர்களுக்கு ஆறு, ஒன்பதாம் வீட்டின் அதிபதியான குரு பகவான் வருட ஆரம்பத்தில் 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
பெரிய முதலீடு, கடன் வழங்கல் தவிர்க்க வேண்டும். கல்வி, வேலை, தொழில் காரணமாக செலவுகள் வரும். ஜூன் 2, 2026க்கு பின் கடகத்தில் உச்சம் பெற்று தொழில் மாற்றம், வேலை, பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.
சுயதொழிலில் வளர்ச்சி உண்டு. அக்டோபர் 31க்கு பின் வரவு அதிகரித்து கடன் வசூல், சொத்து லாபம் கிடைக்கும். ராகு அஷ்டமத்தில் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் அவசியம்.

சனி பெயர்ச்சி பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு ஏழு, எட்டாம் வீட்டின் அதிபதியான சனி பகவான் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும்.
2026 முழுவதும் உற்சாகம், ஆரோக்கியம் கிடைக்கும். வேலை, பதவி, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்ற முன்னேற்றங்கள் உண்டாகும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமணம், குழந்தை, சொத்து தடைகள் நீங்கும். ஜூன் 2க்கு பின் சுப நிகழ்ச்சிகள், கல்வியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

ராகு பெயர்ச்சி
டிசம்பர் 5 வரை ராகு எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிலும் இருந்து பின்னர் ராகு ஏழாம் வீட்டிற்கும், கேது ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைவார்கள். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்ல பலன்களை தரும்.
ராகு எட்டாம் இடத்தில் குருவின் பார்வை பெறுவதால் அதிர்ஷ்டம் பெருகி தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
விபரீத ராஜயோகத்தால் வீடு, மனை, தொழில் விரிவில் வெற்றி, அடமான சொத்து மீட்பு, புதிய வீடு, சகோதர வழி வருமானம், உபரி வரவு மற்றும் எதிர்பாராத உயர்பதவிகள் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).