அமேசான் உதவியுடன் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவது எப்படி?
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டினை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிக் கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்கள்
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை செப்டம் 30ம் தேதிக்குள் அருகில் இருக்கும் வங்கியில் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி உத்திரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அமேசான் நிறுவனம் இதற்காக புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. ‘Cash Load at Doorstep’ என்ற இந்த திட்டத்தின் மூலம் KYC செய்த வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு டெலிவரி ஏஜெண்டுகள் இந்த ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்வார்களாம்.
இவ்வாறு மக்கள் கொடுக்கும் இந்த 2000ரூபாய் நோட்டுகள் Amazon Pay Balance பணமாக திருப்பி கொடுத்துவிடுமாம். அதாவது ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை இவ்வாறு மாற்றிக்கொள்ளலாமாம்.
எப்படி இதை செயல்படுத்துவது?
ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு நீங்கள் KYC வடிக்கையாளராக இருக்க வேண்டுமாம்.
5 நிமிடங்கள் வீடியோ KYC செய்ய வேண்டும். இதற்காக உங்களது செல்பி புகைப்படம் மற்றும் PAN கார்டு தேவையாம்.
உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, அமேசான் ஏஜெண்ட் ஒருவரிடம் வீடியோ கால் பேச வேண்டும். பின்பு Cash On delivery ஆர்டர் ஒன்றினை அமேசான் மூலம் மேற்கொள்ள வேண்டுமாம்.
உங்கள் டெலிவரியை எடுத்துவரும் ஏஜென்ட்டிடம் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து Amazon Pay balance பணமாக உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |