குரங்கை விரட்டிய தந்தை! பரிதாபமாக பலியான 2 மாத குழந்தை: நடந்தது என்ன?
குரங்கை விரட்ட சென்ற தந்தையின் கையில் இருந்த இரண்டு மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கை விரட்டிய தந்தை
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் நிஷாந்த், மாலதி தம்பதிகள். இதில் நிஷாந்த் அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தங்களது இரண்டு மாத கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு பொருள் வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்பொழுது குரங்கு ஒன்று எதிர்பாராத விதமாக நிஷாந்த் கையில் இருந்த மளிகை பொருட்களை பிடிங்கிக் கொண்டு சென்ற நிலையில், அதனை வாங்குவதற்கு முயற்சித்த போது கையில் இருந்த இரண்டு மாத குழந்தையை கீழே போட்டுள்ளார்.
குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு வீங்க நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்பு உயர் சிகிச்சைக்கு அரசு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.