தங்கத்தின் விலையை தாண்டிய தக்காளி விதை! ஒரு கிலோ 3 கோடியா?
தங்கத்தை விட அதிக விலை கொண்ட தக்காளி விதைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாறுமாறாக உயர்ந்த தக்காளி
இந்தியாவில் தக்காளியின் விலை சில வாரங்களாக தாறுமாறாக உயர்ந்த வரும் நிலையில், மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கு மத்தியில் தங்கத்தினை விட அதிக விலை கொண்ட தக்காளி விதை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம். இந்த தக்காளி விதைகளின் ஒரு கிலோ பாக்கெட்டின் விலை சுமார் 3 கோடி ரூபாய்.
இந்த பணத்தில் ஐந்து கிலோ தங்கத்தை வாங்கிவிடலாம் என்று மக்கள் பிரமித்து வருகின்றனர். Hazera Genetics என்ற நிறுவனம் விற்கும் இந்த தக்காளி விதைக்கு, ஐரோப்பிய சந்தையில் அதிக தேவை இருக்கின்றதாம்.
அதாவது ஒரு தக்காளி விதையில், இருபது கிலோ தக்காளி விளையும் என்றும் ஆனால் இவை விதையில்லாமல் தான் இருக்கும். இதன் சுவை தனித்துவமான காணப்படுமாம்.
ஒவ்வொரு முறை பயிரிடப்படும் போது புதிய விதைகளையே வாங்க வேண்டுமாம். ஒருமுறை சுவையை அனுபவித்தால் தொடர்ந்து இதை மட்டும் தான் மக்கள் பயன்படுத்துவார்களாம்.
Hazera Genetics நிறுவனம், ஆராய்ச்சி, உற்பத்தி, செயலாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றில் அதன் செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
விதைகள் வணிக தரம் வாய்ந்ததா என்பதை உறுதிசெய்ய முழுமையான தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
