2 மசாலா தோசை... 2 காபி இவற்றின் விலை வெறும் 2 ரூபாவா? வைரலாகும் பில்
இன்றைய உணவகங்களில் நாம் சாப்பிடும் உணவுகளின் விலை தாறுமாறாக எகிறிய நிலையில், 1971ம் ஆண்டின் உணவக பில் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1971ம் ஆண்டு உணவ பில்
இன்றைய காலங்களில் வீடுகளில் சமைத்து சாப்பிடுபவர்களை விட கடையில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்.
சமீபகாலமாக 80, 90களில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் பில்கள், ஓட்டல் பில்கள் போன்றவை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது 1971ம் ஆண்டு உணவக பில் ஒன்று வைரலாகி வருகின்றது.
குறித்த பில்லில் இருக்கும் ரூபாயின் மதிப்பு இன்றைய காலத்து மக்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆம் இன்று கடையில் சென்று ஒரு தோசை சாப்பிட்டாலே 100 முதல் 150 ரூபாய் என்று வசூலிக்கப்படுகின்றது.
அந்த வகையில் டுவிட்டரில் டெல்லி மோதி மஹால் உணவகத்தின் பில் ஒன்று வைரலாகி வருகின்றது. குறித்த பில்லில் 2 மசாலா தோசை மற்றும் 2 காபியின் விலை 2 ரூபாய் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பில் டெல்லியின் மோதி மஹால் உணவகத்தின் 51 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குறித்த பில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Moti Mahal restaurant, Delhi's bill receipt of 28.06.1971. 2 Masala Dosa & 2 Coffey, 16 paise tax and Bill is Rs 2.16 only.....! pic.twitter.com/YllnMWQmTD
— indian history with Vishnu Sharma (@indianhistory00) February 1, 2017