ரூ. 126 கோடியில் ராணியின் வைர மோதிரம்! இப்போ யாரிடம் உள்ளது தெரியுமா?
பாரிஸ் நகரின் கடைசி ராணியான Marie Antoinetteக்கு சொந்தமான வைர மோதிரம் ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு தொழிலதிபரான Natasha Poonawallaன் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
மிக அரிதான வைர மோதிரங்கள் ஆபரணங்கள் என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது நீதா அம்பானியாக தான் இருக்கும்.

ஆனால் தொழிலதிபர் Natasha Poonawallaன் ஆபரண நகைகள் பற்றி யாரும் அவ்வளவாக பேசியதில்லை.
கடந்த 15ம் திகதி Dhrumit Merulia தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக அரிதான பிங்க் நிற வைர மோதிரம் பற்றி குறிப்பிட வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ”உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேளுங்கள், 126 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பற்றி நான் பேசப்போகிறேன் என்றதும் உங்கள் நினைவில் வருவது என்ன? என கேள்வி எழுப்புகிறார்.
பாரிசின் கடைசி ராணிக்கு சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது. 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த யூன் நடந்த ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.