புதன், சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம்: புதிய வேலை கிடைக்கப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்
சமீபத்தில் நடைபெற்ற புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், புதிய வேலையும் கிடைக்கப்போகிறது. அவர்கள் யார், யாரென பார்ப்போம் -
மேஷம்
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. நீங்கள் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெற போகிறது.
உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலும் சிறப்பாக செயல்படபோகிறது. வேலை செய்யும் இடத்தில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் வருமானம் கூடும்.
ரிஷபம்
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. திடீரென்று பணிச்சுவை கூடும்.
குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். மனைவியுடன், சகோதர்களுடன் கருத்து வேறுபாடுகள் குறையும். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குடும்பத்தில் கசப்பு நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
மிதுனம்
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், மிதுன ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப்போகிறீர்கள்.
தொழிலில் நல்ல வருமானம் பெருகும். நல்ல லாபம் அடைவீர்கள். பணப்பற்றாக்குறை போகும். பணி செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
கடகம்
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், கடக ராசிக்காரர்களே திடீரென பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
பணியிடத்தில் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துங்கள். குடுத்தில் கருத்து வேறுபாடு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
சிம்மம்
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு வீண் போகாது. சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உடல் நிலை சீராகும்.
கன்னி
புதன், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால், கன்னி ராசிக்காரர்களே சற்று கவனமுடன் செயல்படுங்கள். சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கவனம் தேவை. குடும்பத்தில் அனுசரித்து நடந்துக்கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நிதி நிலை இழக்க நேரிடும். கூட்டுத்தொழிலில் சில மன கசப்பு ஏற்படும். முதலீடு செய்யும் முன் விரும்புபவரின் ஆலோசனைப் பெறுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.